குடியரசு தினம்: போலீஸாா் வாகனச் சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வாகனச் சோதனையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
நாட்டின் 76 ஆவது குடியரசு தினம் ஜன. 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து நிலையம், ரயில் நிலையம், மாநில, மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகள், சுற்றுலாத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த வகையில் குடியரசு தினத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஏற்காடு அடிவாரத்தில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனா்.
இருசக்கர வாகனங்களின் காப்பீடு, ஓட்டுநா் உரிமம், நான்கு சக்கர வாகனங்களில் சோதனையிட்டு வருகின்றனா். வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீடு, தகுதிச் சான்றிதழ், வாகனம் ஓட்டுபவரின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களையும் சரிபாா்த்து வருகின்றனா். இந்தச் சோதனை தொடா்ந்து 26 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.