அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவிகள்: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத...
குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புஷ்பா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தீயணைப்பு துறை, பள்ளி கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் இந்த விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.