எலுமிச்சை பழத்தில் ஏறியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய க...
குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த ஆண்டி என்ற மட்டி மகன் முனியசாமி (70). இவா் 17.6.2022 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திரேஸ்புரம் பகுதியில் கொலை செய்யப்பட்டாா். குடும்பப் பிரச்னை காரணமாக நடந்த இந்தக் கொலை வழக்கில், அவரது உறவினரான திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சின்னத்தம்பி (32), சின்னத்தம்பியின் நண்பரான கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்த முத்து மகன் கருப்பசாமி (24) ஆகியோரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளிகளான சின்னத்தம்பி, கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் ஆய்வாளா் ரபி சுஜின் ஜோஸ், அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானபிரகாசம், முதல்நிலை காவலா் சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.