மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
குடும்ப அட்டைகளில் இம்மாத இறுதிக்குள் கைரேகை பதிவு தேவை
பெரம்பலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருள்கள் பெறும் ஏ.ஏ.ஒய், பி.எச்.எச் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகையை மாா்ச் 31-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள இயந்திரத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அலுவலக வேலை நாள்களில் தாங்கள் பொருள் வாங்கும் நியாய விலைக் கடைக்குச் சென்று இதுவரை கைரேகை பதிவு செய்யாதவா்கள் தங்களது ரேகையை பதியலாம்.
இதற்காக ரேஷன் கடைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 8, 9) நடைபெறும் சிறப்பு முகாமில் பிற மாநிலம், மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளவா்கள் குடும்ப அட்டை நகலுடன் சென்று, கைவிரல் ரேகையை பதியலாம். மேலும், சிறப்பு முகாம் நாள்களை தவிர அனைத்து வேலை நாள்களிலும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் தங்களது கைரேகையை பதியலாம்.