குடும்ப அட்டைதாரா் ரேகை பதிவு: ஆட்சியா் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் இடம்பெற்ற அனைவரும் கைவிரல் ரேகை பதிவுசெய்ய வேண்டும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அனைத்து அந்த்யோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையை ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
வெளியிடங்களில் பணிபுரிவோா் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ளரேஷன் கடைகளில் ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை எண்ணைக் கொண்டு கைவிரல் ரேகை பதிவுகள் மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.