செய்திகள் :

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

post image

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வயது குட்டி சிம்பன்சி ஒன்று, பார்வையாளர்கள் காட்டும் ரீல்ஸ் மற்றும் குறும் வீடியோக்களுக்கு அடிமையானதால், இந்த விநோதமான தடையை பூங்கா நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, விலங்குகளின் நலன் குறித்த ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் வனவிலங்கு பூங்காவின் செல்லப் பிள்ளையாக வலம் வருவதுதான் இந்த "டிங் டிங்". குழந்தையைப் போலவே குறும்புகொண்ட இந்தக் குட்டி சிம்பன்சியைக் காண, தினமும் ஏராளமான பார்வையாளர்கள் கூடுகின்றனர். அப்படி வரும் பார்வையாளர்கள், டிங் டிங்கின் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்கள் மொபைல் போன்களில் உள்ள ரீல்ஸ் மற்றும் வேடிக்கையான வீடியோக்களை, அதன் கூண்டின் கண்ணாடி வழியாகக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

வேடிக்கையான வீடியோக்கள் காண்பதில் டிங் டிங் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோக்களின் ஒளியும், ஒலியும் அதைக் கவர்ந்ததால், நாளடைவில் இது ஒரு பழக்கமாக மாறி டிங் டிங் ஒரு மொபைல் போன் அடிமையாகவே மாறியது.

இதன் தாக்கத்தை புரிந்துகொண்ட பூங்கா நிர்வாகம், உடனடியாக ஒரு நடவடிக்கையை எடுத்தது. டிங் டிங்கின் கூண்டிற்கு வெளியே, ஒரு பெரிய அறிவிப்புப் பலகையை வைத்தது. அதில், டிங் டிங்கின் படத்துடன், ஆங்கிலத்தில் "Stop! Stop!" மற்றும் "No" என்றும், சீன மொழியில் "எனக்கு மொபைல் போன்களைக் காட்டாதீர்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏன் இந்தத் தடை?

இது குறித்துப் பூங்கா ஊழியர் ஒருவர் கூறுகையில், "அதிகப்படியான ஸ்கிரீன் நேரம், டிங் டிங்கின் கண் பார்வையைப் பாதிக்கும். ஒரு சிம்பன்சியால் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டாலோ மனிதர்களுடன் சரியாகத் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலோ, அது கவலைக்குள்ளாகி, மன அழுத்தத்திற்கு ஆளாகும்” என்று கூறியிருக்கிறார்.

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க

Jwala Gutta: 30 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கிய விஷ்ணு விஷால் மனைவி; குவியும் பாராட்டு!

தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க, அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை சில மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. அந்த வங்கிக்கு தாய்மார்கள் தங்களது குழந்தைக்குப் போக எஞ்சியிருக்கும் பாலைத் ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: சாப்பாடு எனக் கருதி பணக்கட்டை எடுத்த குரங்கு; பணத்தில் நனைந்த மக்கள்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா என்ற நகரத்தில் சாமி சிலைகள் போன்ற ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருபவர் பால்கோபால். இவர் தனது கடையில் வசூலான பணத்தை எண்ணி ... மேலும் பார்க்க

``முதுகுவலி காரணமாக விடுமுறை கேட்டவர் 10 நிமிடத்தில் மாரடைப்பால் மரணம்'' - ஊழியர்கள் அதிர்ச்சி

மனிதர்களுக்கு மாரடைப்பு எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. காலையில் நன்றாக இருப்பார்கள். திடீரென மாலையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள். இப்போதெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்... மேலும் பார்க்க

Bengaluru: `தண்ணீருக்கு இந்த மாதம் ரூ.15,000' - இணையத்தில் வைரலாகும் வாட்டர் பில் - பின்னணி என்ன?

பெங்களூருவில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் அதிகமான தண்ணீர் கட்டணங்கள் வசூலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, வைரலாகியுள்ளது.சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வசிக்க... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: ``அஜித் சார்கிட்ட சொல்லவேண்டியது ஒன்னு இருக்கு'' - Digital ICON மதன் கௌரி

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன். `Best Solo Creator - Male', `Be... மேலும் பார்க்க