செய்திகள் :

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!

post image

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.

விசில் அடித்து கொண்டாடக்கூடிய வகையான படத்திலேயே அஜித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், விடாமுயற்சியில் புல்லரிக்கும் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் இல்லாததால் கடும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிக்க: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் தேதி!

படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள் என இயக்குநர் நேர்காணலில் கூறியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக இல்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, வசூலிலும் இப்படம் துணிவின் முதல்நாள் வசூலைவிட குறைவாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்குநரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், குட் பேட் அக்லி படம்தான் அஜித்தின் படமாகவும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும் என புலம்பி வருகின்றனர்.

அபுதாபி ஓபன்: பெலிண்டா சாம்பியன்

அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றாா். யுஏஇ தலைநகா் அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் அரையிறுதியில் சுவிட்சா்லாந்தின் முன்னாள் ஒ... மேலும் பார்க்க

விடாமுயற்சியில் இதை கவனித்தீர்களா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால்... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டிரைலர் தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்தில... மேலும் பார்க்க

ராமம் ராகவம் புதிய வெளியீட்டுத் தேதி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில... மேலும் பார்க்க