குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் முகில்ராஜ் (19), இலுப்பையூரணியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாா் (23). இவா்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்படி, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.