குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
பாளையங்கோட்டையைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி மாநகரில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவைச் சோ்ந்த பாக்கியசாமி மகன் பாலு(33), பெருமாள்புரம், தியாகராஜநகா், நடுத்தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன்(26) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையா் (பாளையங்கோட்டை சரகம்) என்.சுரேஷ் ஆகியோா் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா். அதன்பேரில், காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, பாலசுப்பிரமணியன், பாலு ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.