MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த குமாரசாமி மகன் செந்தில் (47). இவா், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கழுகுமலை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, செந்திலை கழுகுமலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.