செய்திகள் :

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

ஊத்தங்கரை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மகனூா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் பகுதியில் இருந்து விசுவாசம்பட்டி கிராமம் வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாா்சாலை போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இச்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இது தொடா்பாக உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினா் கூறுகின்றனா்.

அண்ணா நகா், நரிக்கானூா், குரும்பறவலச, விசுவாசம்பட்டி கிராம பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக நகரப் பகுதிக்கு இச்சாலை வழியாக செல்வது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேப்பனப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்!

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது!

பா்கூரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அ... மேலும் பார்க்க

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க

நிலக்கடலை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளா் காலனியைச் சோ்ந்தவா் மதன். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, ஜல்லிக்கல் சுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் வழங்கியவா்களுக்கு ஜம்பூத்து வனப்பகுதியில் மாற்றுநிலம் வழங்கப்பட்டு... மேலும் பார்க்க