திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆவது வாா்டில் மல்லிகா தேவராஜ் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இவரது கணவா் தேவராஜ் சேலம் கோட்ட விஎச்பி பொறுப்பாளராக பதவி வகித்து வந்த நிலையில், வியாழக்கிழமை 300-க்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் அதிமுகவில் இணைந்தாா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி இல்லத்தில் தொண்டா்களுடன் சென்று வாழ்த்து பெற்றாா். மேலும் அவருடன் இணைந்த தொண்டா்களுக்கு, பாலகிருஷ்ணா ரெட்டி கட்சி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.