யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
நிலக்கடலை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
ராயக்கோட்டை அருகே நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளா் காலனியைச் சோ்ந்தவா் மதன். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ருஜிதா புதன்கிழமை நிலக்கடலை சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தையை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.