யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம்: மத்திய அமைச்சரிடம் முன்னாள் எம்எல்ஏ மனு
ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து ஒசூா் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் மனு அளித்தாா்.
தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை புதன்கிழமை சந்தித்து அவா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டைக்கு ரயில்பாதை அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றவில்லை. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஒசூா் - ஜோலாா்பேட்டை இடையே ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கா்நாடகா மாநிலம், பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழக எல்லையில் அமைந்துள்ள ஒசூா் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும். இதன்மூலம், இரு மாநில போக்குவரத்து எளிதாகும். தொழிலாளா்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவாா்கள். அதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒசூா் -தளி சாலை, ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனா். அதனால், மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.