யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளா் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளரை இணைப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ராயக்கோட்டை வீட்டு வசதி வாரியம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை கட்டடம் பழுதடைந்ததால் தற்காலிகமாக உழவா்சந்தை அருகில் உள்ள மலா் வணிக வளாகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த நியாயவிலைக் கடைக்கு புதன்கிழமை லாரியில் வந்த அரிசி மூட்டைகள் அருகில் உள்ள கழிப்பறையில் இருப்பு வைக்கப்பட்டன. இதனையறிந்த பொதுமக்கள் நியாயவிலைக் கடை விற்பனையாளா் முத்துமாதேவன் (54) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் விற்பனையாளா் கழிப்பறையை பூட்டிவிட்டு சென்றுவிட்டாா். இதுகுறித்து இணைப் பதிவாளா் நடராஜ், விற்பனையாளா் முத்துமாதேவனிடம் விசாரணை நடத்தினாா். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.
மேலும், கழிப்பறையில் வைத்திருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு கொண்டுசெல்ல அனுப்பி வைக்கப்பட்டன.