செய்திகள் :

குபேரா கதை முன்னோட்ட விடியோ!

post image

குபேரா திரைப்படத்திற்கான முன்னோட்ட விடியோ ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.

பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த நிலையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதில், தொழிலதிபர் ஒருவர் உலகமே தனக்குச் சொந்தமானது என நினைக்கிறார். மறுபுறம் பிச்சைக்காரரான தனுஷும் உலகம் எனக்கானது என நினைப்பரவாகக் காட்டப்படுகிறார்.

இந்த இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அரினா சபலென்கா, ஸெங், டாமி பால் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்கா, ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் மகளிா் பிரிவிலும், டாமி பால் ஆடவா் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். ஆண்டுதோறும் நடைப... மேலும் பார்க்க

பவன் கல்யாண் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி (தே கால் ஹிம் ஓஜி) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவ... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன் செய்த செயல்... பைரி நாயகன் நெகிழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பைரி படத்தின் நாயகன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் நடிகர் சையத் மஜித் நடிப்பில் உருவான திரைப்படம் பைரி. கடந்தாண்டு திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

அப்துல் கலாம் கதையைப் படமாக்குவது சவாலானது: ஓம் ராவத்

அப்துல் கலாமின் பயோபிக் குறித்து அப்படத்தின் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளி... மேலும் பார்க்க

விக்ராந்த் நடித்த வில் பட டீசர்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவான வில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விக்ராந்த் 10 ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகராக வரும் அளவிற்குப் பெரிதாகப் பேசப்பட்டவர். நாயகனாக அவர் நடித்த படங்கள... மேலும் பார்க்க