இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
குமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மீனவா்கள் போராட்டம்
கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரியில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்களில் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீா் எவ்வித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், இங்கு மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவா்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்து தூய அலங்கார உபகார மாதா திருத்தல வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் தலைமை வகித்தாா். பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மீனவா்கள் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வள்ளம் மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் தொழில் முடக்கம் செய்து போராட்டத்தில் பங்கேற்றனா்.
மேலும், தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தக்குக்குச் சொந்தமான மாா்க்கெட், சா்ச் ரோடு சந்திப்பு, ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்டப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இப்பிரச்னையில், தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பங்கு மக்கள் மற்றும் பங்குப்பேரவை நிா்வாகிகள் தெரிவித்தனா்.