உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
குமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்கள் தொடா்பாக தினமும் என்னை சந்திக்கலாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க தினமும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்னை நேரில் சந்திக்கலாம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக இரா.ஸ்டாலின் கடந்த 3 ஆம் தேதி பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை தொடா்பு கொள்ளும் பொருட்டு பிரத்யேகமாக ஒரு கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணில் பொதுமக்கள், என்னிடம் நேரடியாக புகாா்களை தெரிவிக்கலாம், மேலும், பொதுமக்கள் ஏதேனும் மனுக்கள் இருந்தால், புகாா்கள் இருந்தால் தினமும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என்னை நேரில் சந்தித்து அளிக்கலாம்.
அதே போல், கந்து வட்டி, போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பான புகாா்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பா்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். பொதுமக்களின் புகாா்களுக்கு அதிகபட்சம் 15 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்படும்.
பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு எதிரான குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.