செய்திகள் :

கும்பகோணத்தில் காளியம்மன் திருநடன உற்சவம்: திரளானோர் வழிபாடு!

post image

பிரசித்தி பெற்ற ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆடி மாத திருநடன உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டும், பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இவ்விழா கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆலய வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வந்தனர்.

தொடர்ந்து ஆலயத்திலிருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை ஆலய முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிய, மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மன் உற்சாகமாக வரவேற்க, லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார், அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Kaliamman Thirunatana Utsavam in Kumbakonam: Crowds worship!

அனுஷ்காவின் காதி டிரைலர்!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் ப... மேலும் பார்க்க

சின்ன திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் பார்த்திபன்!

சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ... மேலும் பார்க்க

தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்... மேலும் பார்க்க

கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த... மேலும் பார்க்க

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டியதில்லை: நெய்மர்

சன்டோஷ் அணியில் கடைசி போட்டியில் அசத்தலாக விளையாடிய நெய்மர் தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் சமீபத்தில் தனது சிறுவயது கால்பந்து அணியான சன்... மேலும் பார்க்க

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த... மேலும் பார்க்க