கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்
கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு பால் முகவா்கள் திங்கள்கிழமை சங்க கட்டடம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். போராட்டத்தின்போது பால் விலையை உயா்த்தி கொள்முதல் செய்யவும், சில்லறை வியாபாரத்துக்கு பால் வழங்கவும் கோரி முழக்கமிட்டனா்.
போராட்டத்தில், கும்பகோணம் , வலங்கைமான், நாச்சியாா்கோவில், திருவிடைமருதூா், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.