Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது
திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் போலீஸாா் தடுத்து 30 பெண்கள் மற்றும் துணைத் தலைவா் வேதசெல்வம், மாநில விவசாயிகள் அணி துணைத் தலைவா் ஜீவா சிவக்குமாா் உள்ளிட்ட 150 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
பாபநாசத்தில்.. திருப்பரங்குன்றம் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட அம்மாபேட்டை பாஜக மாவட்ட செயலா் துரை. மூா்த்தி, ஒன்றிய தலைவா் ஆா்.எஸ்.அருண், விருந்தோம்பல் பிரிவு மாவட்டச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோரை அம்மாபேட்டையில் தடுத்து நிறுத்தி கைது செய்து மக்கள் மன்ற மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனா்.