செய்திகள் :

கும்பமேளா: "அது ஒன்றும் பெரிய சம்பவம் இல்லை" - 30 பேர் இறந்தது குறித்து பாஜக எம்பி ஹேமாமாலினி பேச்சு

post image

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய கும்பமேளாவில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.

கடந்த வாரம் பக்தர்கள் மெளனி அமாவாசையன்று அதிகாலையில் புனித நீராடக் குவிந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். ஆனால் கூட்ட நெரிசலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், அதனை உத்தரப்பிரதேச அரசு மூடி மறைப்பதாகச் சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்டபோதும் தொடர்ந்து வி.ஐ.பி.க்கள் கும்பமேளாவிற்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.

திரிவேணி சங்கமத்தில் நடிகை ஹேமாமாலினி புனித நீராடிய பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''கும்பமேளாவில் புனித நீராடியது மிகவும் அருமையான குளியல். இது போன்ற ஒரு அனுபவத்தை இதற்கு முன்பு அனுபவித்தது கிடையாது'' என்று கூறினார்.

நடிகை ஹேமாமாலினி
நடிகை ஹேமாமாலினி

கும்பமேளா நடந்த கூட்ட நெரிசல் குறித்து ஹேமாமாலினியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''அது ஒன்றும் பெரிய சம்பவம் கிடையாது. அது எப்படி இந்த அளவுக்குப் பெரிதாக்கப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பவம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிர்வாகம் கும்பமேளாவை மிகவும் சிறப்பாக நிர்வகித்துள்ளனர். அனைத்தும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. கும்பமேளாவிற்கு இவ்வளவு பேர் வரும்போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியாது'' என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்துக் கேட்டதற்கு, அவர்கள் தாங்கள் விரும்புவதைச் சொல்கின்றனர் என்றார். ஹேமாமாலினியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.தாரிக் அன்வர் கூறுகையில், ''கும்பமேளாவில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஹேமாமாலினிக்கு ஒருபோதும் தெரியாது. அவர் வரும்போது வி.ஐ.பி மரியாதை கொடுக்கப்படுகிறது. போலீஸாரும், நிர்வாகமும் வி.ஐ.பிவ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சாமானிய மக்களுக்கான ஏற்பாடு மற்றும் பாதுகாப்பைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் இல்லை என்று கூறியிருப்பதன் மூலம் இறந்தவர்களைக் கேலி செய்துள்ளார்'' என்றார்.

கும்பமேளா 2025

சமாஜ்வாடி கட்சி எம்.பி.தர்மேந்திர யாதவ் இது குறித்துக் கூறுகையில், ''ஹேமாமாலினி அரசியல் கட்சித் தலைவர், நடிகை என்பதால் அவருக்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கப்படுகிறது. அவருக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். அதை யாரும் மறைக்க முடியாது'' என்றார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பாராளுமன்றத்தில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Kumbh Mela: அப்போ உலக அழகி, இப்போ சந்நியாசி... பாலிவுட் நடிகை இஷிகா தனேஜாவின் புது அவதாரம்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கானோர் பிரயக்ராஜ் நகர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் சர்வதேச தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்... மேலும் பார்க்க

தை அமாவாசை: குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்! - Photo Album

தை அமாவாசை: திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்.! மேலும் பார்க்க

கிழிந்த ஜீன்ஸ், ஸ்கர்ட்களுக்கு தடை... மும்பை கோயில் ஆடைக் கட்டுப்பாட்டிற்குப் பக்தர்கள் எதிர்ப்பு

மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோயில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகும். இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்திவிநாயக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கோயில் நிர்வா... மேலும் பார்க்க

Ooty: பழங்குடிகளிள் இசை... படுகர்களின் வண்ணக் குடை... களைகட்டிய ஈஸ்வரன் கோவில் திருவிழா|Photo Album

நாடோடிப் பழங்குடிகள் மங்கள இசையில், பாரம்பரிய படுகர் இன மக்களின் வண்ணக் குடை ஊர்வலத்துடன் அடிவாரத்திலிருந்து சுமார் 600 படிக்கட்டுகள் நடந்து மலை உச்ச கோவிலுக்கு அழைத்துவரப்பட்ட ஈஸ்வரன். ஆடலும் பாடலுமா... மேலும் பார்க்க

Mamta Kulkarni: அப்ப பாலிவுட் ஸ்டார்; இப்ப சந்நியாசி.. கும்பமேளாவில் நடிகை மம்தா எடுத்த புது அவதாரம்

பாலிவுட்டில் 1990களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் மம்தா குல்கர்னி. திடீரென நடிப்பிலிருந்து காணாமல் போன மம்தா குர்கர்னி தென்னாப்பிரிக்காவில் விக்கி கோஷ்வாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் திரு... மேலும் பார்க்க

Kumba Mela: `மாடலிங், நடிப்பில் நிம்மதியில்லை’ - கும்பமேளாவில் கவனம் பெறும் இளம் பெண் துறவி

உத்தபிரதேச கும்பமேளா..!உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெ... மேலும் பார்க்க