செய்திகள் :

கும்ப ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

post image
கும்ப ராசியில் பிறந்த நீங்கள், தவறுகளைத் தட்டிக்கேட்க தயங்காதவர். நேர்மையுடன் நடந்துகொள்வீர்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!

1. கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது, புத்தாண்டு பிறக்கிறது. கெளரவ பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். 

2. மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். 

3. சகோதரர்களுக்குத்  திருமணம் சிறப்பாக முடியும். உடன்பிறந்தவர் கள், உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

4. புத்தாண்டு பிறக்கும்போது செவ்வாய் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களின் உதவியால் சில வேலைகள் முடிவுக்கு வரும். 

5. வெகுநாள் கனவாக இருந்த உங்களின் வீடு வாங்கும் ஆசை, இப்போது நிறைவேறும். உங்களில் சிலர், வெளிநாடு சென்று வருவீர்கள். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். 

6. உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். 

7. இந்தாண்டு சனியின் சஞ்சாரப்படி, அவர் ஜன்மச் சனியாக நிற்கும் நிலையில், வீண் வம்பு-வழக்குகளில் தலையிடும்படியான சூழல்  உருவாகும். விமர்சனங்கள் குறித்து வருத்தம் உண்டாகும்.

8. சிலருக்கு நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை - கால் மரத்துப் போவது ஆகிய பாதிப்புகள் வந்து நீங்கும். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். 

9. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்துப் பேசவேண்டாம். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள்.

10. ஏப்ரல் 25 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.

11. சாதாரணமாகப் பேசப் போய் சண்டை யில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். 

12. ஏப்ரல் 26 முதல், வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் அமர்வதால், எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும்.  

13. அவ்வப்போது யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப் பாருங்கள்.

14.  மே மாதம் 10-ம் தேதி வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும்  பதற்றத்துடன் காணப் படுவீர்கள். வீட்டைக் கூடுதல் செலவு செய்து சீர்செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

15. குடும்பத்தில் தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப்பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 

16, மே 11 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5-ம் வீட்டில் வந்தமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 

17. உங்களில் சிலர் புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். 

18. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் உண்டு.பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத் திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

19. வியாபாரிகளே! பொறுப்பாகச் செயல்பட்டு லாபத்தைப் பெருக்கப் பாருங்கள். பெரிய முதலீடுகளைப் போட்டுச் சிக்கிக்கொள்ளாதீர்கள். வேலையாள்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 

20. பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிஷன், அரிசி, எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். 

21. உத்தியோகஸ்தர்களே! பணியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிப்பு உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். 

22. அரசுத்துறையினர், முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். 

23. கணினித் துறையினர், வேலை அதிகம் என்று சலிப்படைய வேண்டாம். ஆதாயமும் அதிகம் உண்டு எனலாம். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் இருக்கும். 

24. வெளிவட்டாரங்களில் அந்தஸ்து உயரும். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். உழைப்பால் கிடைக்கும் உயர்வு, பேச்சால் கைநழுவும் வாய்ப்பு உண்டு. 

25. மொத்தத்தில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தருவதாக இந்தப் புத்தாண்டு அமையும். ஒருமுறை குடும்பத்துடன் சென்று காஞ்சி காமாட்சியம்மனை வழிபட்டு வாருங்கள். இயலாது எனில், அருகிலுள்ள சிவாலயத்துக்கு, முழுநிலவு நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி அம்பாளை வழிபட்டு வாருங்கள்; சகல வளங்களும் கிடைக்கும்.

2025 -ல் என்ன நடக்கும்? `போர், எழுச்சிபெறும் நாடு..' - ஒரே மாதிரி கணித்த பாபா வாங்கா, நாஸ்ட்ராடமஸ்

2025ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு வருட பிறப்பிலும் இந்த ஆண்டு நமக்கு ராசியானதாக அமையுமா என்பதை ஜோதிடம் பார்த்து அறிந்துகொள்ள விரும்புவர். இதேப்போல மொத்த உலகத்துக்கும் ஜோதிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் உள்ள... மேலும் பார்க்க

ஷெல்வீ | 2025 - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் | Shelvi New Year Rasi palan

ஜோதிடர் ஷெல்வி கணித்துச் சொல்லும் 2025 - ம் ஆண்டு 12 ராசிகளுக்குமான பலன்கள்... பரிகாரங்கள். மேலும் பார்க்க

January Rasipalan ? | 12 ராசிகளுக்கும் பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட தேதிகள் ? | ஜனவரி 2025

ஜனவரி மாதத்துக்கான 12 ராசிகளுக்குமான பலன்களை அதிர்ஷ்டத் தேதிகளோடு கணித்துச் சொல்கிறார் பாரதி ஶ்ரீதர். மேலும் பார்க்க

விருச்சிக ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் சகல அனுபவமும் பெற்றவர்; விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணி... மேலும் பார்க்க