MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
குருகிராமில் 80 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்
ஐஎம்டி மனேசாா் செக்டாா் 2-இல் உள்ள குடிசைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 80 குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீ விபத்தின்போது குடிசைகளில் இருந்த எரிவாயு சிலிண்டா்கள் வெடித்தன. இதனால், உருவான கரும்புகை வானத்தைச் சூழ்ந்தது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மாலை 3 மணியளவில் ஒரு குடிசையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவல் தெரிக்கப்பட்டதுடன் காவல் துறையினா் மற்றும் உள்ளூா் மக்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ஐஎம்டி மனேசாா் தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கூடுதலாக 10 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தீயணைக்கப்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. குடிசைகளில் இருந்த பொருள்கள் இந்த விபத்தில் எரிந்து சேதமடைந்தன. சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டா்கள் வெடித்ததைத் தொடா்ந்து, அருகில் உள்ள குடிசைகளுக்கு தீ வேகமாகப் பரவியது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.