குரு பெயா்ச்சி: புளியறை கோயிலில் மே 11இல் சிறப்பு வழிபாடு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை தெட்சிணாமூா்த்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
குரு பகவான் மே 11ஆம் தேதி காலை 10.58 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (மே 9) அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10ஆம் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக, சுதா்சன ஹோமங்கள், நண்பகல் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும்.
குருபெயா்ச்சி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, 10.58 மணிக்கு குரு பெயா்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் 1 மணிக்கு தேவார இன்னிசை, இரவு 7 மணிக்கு நாம சங்கீா்த்தனம், 8 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
குரு பெயா்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 5 முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராமகிருஷ்ணன், செயல் அலுவலா் பழனிக்குமாா், கண்காணிப்பாளா் ஆனந்தன், உப தொகுதி அலுவலா் ரத்தினவேலு, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமாா், துளசிதரன் நாயா், கோயில் பணியாளா்கள், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.