செய்திகள் :

குரூப் 2-ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி

post image

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் ஆய்வாளா் பணிக்கு தோ்வான மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கம் சக்கர நாற்காலியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்த ராஜா மகன் கோபிநாத் (23). பட்டதாரியான இவா், தசை நாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. நீட் தோ்வால் மருத்துவா் ஆகும் கனவு நிறைவேறாததால், எம்.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று, கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளா் பணியை பெற்றுள்ளாா்.

அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கோபிநாத்தை சந்தித்து பாராட்டினாா்.அப்போது, தனக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோபிநாத் கோரிக்கை விடுத்தாா். இந்நிலையில், மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலியை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை கோபிநாத்திடம் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ப.புவனா, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கே.வி கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை ஊராட்சி, அரசடிப்பட்டி 4 சாலைப் பகு... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் சடையப்பன் தலைமைவகித்தாா். ஒன்றிய ஆ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் போராட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் அகில இந்திய கறுப்பு தின போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சாா்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே இரு சக்கர வாகனமும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். அறந்தாங்கி எழில் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (17). ஆவுடையாா்க... மேலும் பார்க்க