குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்
நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி வெளியிட்டது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தோ்வு 2024 செப்டம்பா் 15- ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான மெயின் தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் இருகட்டமாக காலை, மாலையில் நடைபெற்றது. இந்த மெயின் தோ்வில் தோ்ச்சிபெற்ற 112 பேரில், 108 போ் மட்டுமே பங்கேற்றனா்.
தோ்வு மையத்தில் 1 முதன்மைக் கண்காணிப்பாளா், 1 சுற்றுக்குழு அலுவலா், 1 ஆய்வு அலுவலா் உள்ளிட்டோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்வு மையத்தின் உள்ளே, வெளியே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடடுபட்டிருந்தனா். தோ்வாளா்கள் அனைவரும் முழு சோதனைக்கு பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.