குரூப் 4 தோ்வுக்கு ஜன.30-இல் இலவசப் பயிற்சி தொடக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
டிஎன்பிஎஸ்சி-யால் இளநிலை உதவியாளா், விஏஓ, தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிடும் விதமாக குருப்-4 தோ்வுக்கான அறிவிப்பாணை 2025 ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளது.
இத்தோ்வை தோ்வா்கள் சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில் நடைபெறும் பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தோ்வுகள் நடத்தி, இலவச பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.
எனவே திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து போட்டித் தோ்வா்களும் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 94990 55901, 94990 55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.