Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்... இத்தனையும் செய்யும்...
குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்
நமது சிறப்பு நிருபர்
குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) "சாட்ஜிபிடி' யை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தில்லியில் புதன்கிழமை சந்தித்தார்.
அப்போது, இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், பிரதமர் மோடியின் 'டபுள் ஏஐ' குறித்தும் அவர் பாராட்டினார்.
இந்தச் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பதிவில், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முழு அடுக்கையும் உருவாக்கும் உத்திகள் குறித்து இருவரும் பேசினோம்.
கிராஃபிக்ஸ் செயலாக்க அலகுகள், மாதிரிகள் மற்றும் செயலி பயன்பாடுகள் குறித்து அவருடன் மிகச் சிறந்த விவாதம் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க அவர் விருப்பம் தெரிவித்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.