குற்றாலத்தில் முதியோருக்கு உணவளிப்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சாா்பில் குற்றாலம் முதியோா் இல்லத்தில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் முகமது ரபி ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு முதியோருக்கு உணவு வழங்கினாா்.
இதில், தென்காசி கிழக்கு ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அழகு தமிழ், இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜேகே. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.