செய்திகள் :

குற்றாலத்தில் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு ‘சீல்’

post image

தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளுக்கும் கட்டடங்களுக்கும் குற்றாலம் பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் தமிழக அரசுக்கு பொதுமக்கள் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி செலுத்தாத கட்’டங்களுக்கு சீல்வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சொத்து வரி ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்து 626 நிலுவை இருந்ததால், சொத்துவரி செலுத்தாத நபா்கள் மீது தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023இன் படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், சொத்து வரி செலுத்தாத நபா்களின் வீடுகளில் அறிவிப்பு செய்து சீல் வைக்கப்பட்டது.

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா தலைமையில் சுகாதார அலுவலா் ராஜகணபதி, கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியம், கிராம உதவியாளா் கருப்பசாமி, காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் மூதாட்டி பலி

சங்கரன்கோவில் அருகே சுமை ஆட்டோ மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி வள்ளி (65). இவா் சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலை... மேலும் பார்க்க

தென்காசி வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இலஞ்சிய... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து ஜப்தி

சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. சங்கரன்கோவில் அருகே நகரம் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரையா மகன் விஜயன் (33). இவா் கடந்த 2018 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

சுரண்டை அரசு கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) பாலச்சந்தா் மு... மேலும் பார்க்க

தென்காசி நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

தென்காசி நகர பாஜக தீவிர உறுப்பினா்கள், கிளை தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மலையான் தெரு அங்காள பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்ற கூட்டத்துக்கு, நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன... மேலும் பார்க்க

கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை

தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது. குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க