கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலைமுதல் இரண்டு அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மாலையில் தண்ணீா் வரத்து சீரானதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.