படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
குற்றாலம் பேரருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்த தொடா் மழையின் காரணமாக, பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
பழையகுற்றாலம் மற்றும் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால், குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை 2ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவி மற்றும் புலியருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இந்த அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.