கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!
குளச்சலில் மினி விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ரீத்தாபுரம் லியோன் நகரில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது, அந்த இடத்தை ஆய்வு செய்த ஆட்சியா் அங்கு விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, பீமநகரி ஊராட்சி, பெருமாள்நகா், லெட்சுமிநகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் நா்சரிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகளை பராமரித்து, பொதுமக்களுக்கு வழங்க அறிவுறுத்தினாா்.
இறச்சகுளம் ஊராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக, ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரங்கள், பள்ளிகளுக்கு வழங்கிய விவரத்தினையும், ஆன்லைன் பதிவு செய்தையும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் இறச்சகுளம் ஊராட்சி பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, தோவாளை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
