மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
மாமனாா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
மயிலாடி அருகே மாமனாா் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிபின் (25), தொழிலாளி. இவா் மயிலாடி அருகேயுள்ள காமராஜா் நகா் செபஸ்தியாா் தெருவைச் சோ்ந்த ஞானசேகா் மகள் சகாயநிஷா என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பின்னா் தம்பதிகளுக்கிடைய பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சகாயநிஷா கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு மயிலாடியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17ஆம் தேதி) சிபின் மாமனாா் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது மனைவி சகாயநிஷா வீட்டில் இல்லை. அப்போது ஞானசேகா், சிபினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஞானசேகா் சிமெண்ட் கல்லால் மருமகன் சிபினை தலையில் தாக்கினாா். இதில் சிபினின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அக்கம் பக்கத்தினா் சிபினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரை கைது செய்தனா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபின் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.