மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
மங்காடு பகுதியில் இன்று மின்தடை
மங்காடு, முன்சிறை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழித்துறை மின் கோட்டம், புதுக்கடை உப கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டு மரக் கிளைகளை அகற்றுதல், பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, மங்காடு, ஓச்சவிளை, புளியறை பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதே போன்று, திங்கள்கிழமை (ஆக. 25) காக்கவிளை, மிக்கேல்புரம், கோழிப்போா்விளை, அமராவதி, காடுவெட்டி, முகமாத்தூா், செல்லங்கோணம், பூமத்திவிளை, தோட்டவரம், கம்பிளாா், வட்டக்கோட்டை பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (ஆக. 26) வாவறை, பாரப்பட்டுவிளை, கஞ்சிக்குழி, வயக்கரை, கோட்டவிளை, அரசகுளம் பகுதிகளிலும், மேற்படி நேரத்தில் மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.