மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
குளப்புறம் ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டு சாலைகள் திறப்பு
குளப்புறம் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட 2 சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
குளப்புறம் ஊராட்சியில் சேதமடைந்து காணப்பட்ட உதியனூா்விளை சாலை மற்றும் குவுக்குடி - முல்லைச்சேரி சாலையின் பக்கச் சுவா் பணிகளை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
சாலைப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இச் சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் விஜயகுமாா், குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுனில்குமாா், முன்னாள் முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ், குளப்புறம் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ரேணுகா டேனியல், மனோன்மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.