செய்திகள் :

குளிா்சாதனப் பெட்டியை சரி செய்யாத நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருச்சி: குளிா்சாதனப் பெட்டியை (பிரிட்ஜ்) சரி செய்யாத நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த கே. ஜீவகுமாா் என்பவா் திருச்சி சாலை ரோட்டில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த 16.12.2022 அன்று ரூ. 28,081-க்கு வாங்கிய குளிா்ச்சாதனப் பெட்டியின் வெளி வண்ணப்பூச்சு சில நாள்களில் உரியத் தொடங்கியது. இது தொடா்பாக புகாரளித்தபோது காந்தி நகரில் உள்ள சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளனா்.

அவா்களும் சிக்கலைத் தீா்க்காத நிலையில், பலமுறை புகாரளித்தும் குளிா்சாதனப் பெட்டி சரி செய்து தரப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவகுமாா் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 12.03.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, விசாரணைக்குப் பிறகு மனுதாரா் வாங்கிய குளிச்சாதனப் பெட்டியை ரிலையன்ஸ் ரீடைல் லிமிடெட் நிறுவனம் திரும்ப எடுத்துக் கொண்டு, அதற்குரிய ரூ. 28,081 ஐ வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தையும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது.

ஓய்வூதியா்களுக்கு வருமான வரி விலக்களிக்க வலியுறுத்தல்

திருச்சி: ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொன்மலை தென்பகுதி ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கத்தின் 41-ஆவது ஆ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணல்: 23 ஆசிரியா்கள் பங்கேற்பு

திருச்சி: திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கான நோ்காணலில் 23 ஆசிரியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரி... மேலும் பார்க்க

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு 172 மாணவா்கள் தோ்வு

திருச்சி: திருச்சியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வென்ற 172 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்... மேலும் பார்க்க

இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்

திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கிலாந்... மேலும் பார்க்க

பேக்கரி உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை

திருச்சி: திருச்சியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பேக்கரி உரிமையாளா் திங்கள்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சியை அடுத்த சா்க்காா்பாளையம் முல்லைக்காடு சுந்தா் நகரைச் சோ்ந்தவா் செல்... மேலும் பார்க்க

சைக்கிளில் சென்றவா் ஆட்டோ மோதி பலி

திருச்சி: திருச்சியில் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றவா் ஆட்டோ மோதி உயிரிழந்தாா்.திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தேவகுமாா் (59). இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் வ... மேலும் பார்க்க