செய்திகள் :

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

post image

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்தது.

இதுதொடா்பாக குழந்தைகளின் ஆதாா் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு யுஐடிஏஐ குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து யுஐடிஏஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதாரைப் பெறுகின்றனா். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.

குழந்தைகள் 5 வயது பூா்த்தி செய்தவுடன் ஆதாரில் அவா்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதுவே முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) எனப்படுகிறது.

5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே எம்பியு மேற்கொள்ள முடியும். 7 வயதுக்கு மேல் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. 7 வயதைக் கடந்த பின்னும் குழந்தைகளின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு ஜாமினில் வெளிவராத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபையில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை கா்... மேலும் பார்க்க

மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!

ஒடிஸாவில் உதவிப் பேராசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.பாலாசோர் மாவ... மேலும் பார்க்க

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க