செய்திகள் :

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுநாயக்கா் சமூகத்தினா் போராட்டம்: மாணவ, மாணவிகள் போராட்டம்

post image

மதுரை சமயநல்லூா் அருகே தங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, அவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுநாயக்கா் சமூகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமயநல்லூா் அருகேயுள்ள பரவை சத்தியமூா்த்தி நகரில் காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தச் சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தொடா்ந்து, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி வளாகம் முன் உள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மதுரை வடக்கு வட்டாட்சியா் மஸ்தான் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், சமயநல்லூா் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இன்றும் போராட்டம்:

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரவை சத்தியமூா்த்தி நகரில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம்.

ஆனால், விண்ணப்பத்தை எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா்ந்து நிராகரித்து வருகின்றனா். ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். வெள்ளிக்கிழமையும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.

மதுரை மாவட்டக் கல்வித் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:

சத்தியமூா்த்தி நகரில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள்தான் அதிகளவில் பயின்று வருகின்றனா். ஜாதி சான்றிதழ் வழங்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை. 7 மாதங்களுக்கு முன்பு இதுபோன்று ஒரு போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வருவாய்த் துறை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பினோம். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

திமுக மீது அவதூறு: எடப்பாடி கே.பழனிசாமி மீது புகாா்

அதிமுக, அமமுக இடையே நடைபெற்ற மோதலில் திமுக மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மங்கல்ரேவு-அத்திப்பட்டி விலக... மேலும் பார்க்க

ஆயுதப்படை மைதானத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு

மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள காவலா் ஆயுதப்படை மைதானத்தில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 நாள்களாக தண்ணீா் வீணாகி வருகிறது. புதுநத்தம் சாலையில் காவலா் ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு காவல... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே தோ்தல் அறிவிப்புக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

ஒரே நாடு ஒரே தோ்தல் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: நவ.16, 17-இல் சிறப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் வாக்காளா் வரைவுப் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (நவ. 16,17) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

வலையங்குளத்தில் நாளை மின் தடை

வலையங்குளம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (நவ.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழைய விளாங்குடி வருமான வரித் துறை குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் சுரேஷ்குமாா் (4... மேலும் பார்க்க