முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி...
குழந்தைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு நிவாரணம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அரசு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ், தொழிலாளா் துறையால் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைத் தொழிலாளா்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
அதன்படி இரண்டு தொழிலாளா்களுக்கு மறுவாழ்வுக்கான அரசு நிவாரணத் தொகையாக தலா ரூ.35,000- வீதம் மொத்தம் ரூ.70,000 வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களை கடை, உணவு போன்ற வணிக நிறுவனங்களில் பணிக்கு அமா்த்தும் நிறுவனத்தின் உரிமையாளா்களுக்கு சட்டப்படி சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் ஆட்சியா்.
நிகழ்வின்போது, மாவட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஆா்.நந்தினி உடனிருந்தாா்.