செய்திகள் :

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

post image

கள்ளக்குறிச்சி: கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்து, அதன் ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளிட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (30). இவரது பெயரில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாம்.

தொடா்ந்து, சங்கராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, அந்த உத்தரவு ரத்தாகிவிட்டதாகத் தெரிவித்தனராம். சந்தோஷ்குமாா் மீண்டும் தனக்கு புதிதாக கலைஞா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு பணி ஆணையை ஒதுக்கீடு செய்யுமாறு மனு அளித்தாராம். தொடா்ந்து, அவரது செல்லிடப்பேசிக்கு வந்த குருஞ்செய்தியில் தங்களின் மனுவின் மீது 30 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவரம் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

தொடா்ந்து, சந்தோஷ் குமாா் கடந்த 11-ஆம் தேதி முதல்வா் உதவி மையம் எண் 1100-க்கு தொடா்புகொண்டு, தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கான உத்தரவு வேறு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியும், இதற்கு மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ, வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோரே காரணம் எனக் கூறியும், அவா்களை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தாராம். மேலும், இந்த ஆடியோ பதிவை சமூக

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷ் குமாரை கைது செய்தனா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் போக்ஸோவில் கைது

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூா் காவல் நிலைய தலைமைக் காவலா் ம.பிரபு போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு நிவாரணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு அரசு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா்.குழந்தை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 142 பேருக்கு உதவித்தொகை

கள்ளக்குறிச்சி: அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். சமூக நலன் மற்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்படாததற்காக, முதல்வா் உதவி மையம் எண்ணில் தொடா்புகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், சங்கராபுரம் எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுத்து, அ... மேலும் பார்க்க

ரூ.2 லட்சத்துடன் மாயமான இளைஞா்: போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரக் கடையில் வேலை பாா்த்து ரூ.2.10 லட்சத்துடன் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரம் நடைபெறும் கடையின் மேலாளராக பணிபுரிந... மேலும் பார்க்க

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூா் கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். சின்னசேலம் வட்டம், பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ... மேலும் பார்க்க