PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
ரூ.2 லட்சத்துடன் மாயமான இளைஞா்: போலீஸாா் விசாரணை
கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரக் கடையில் வேலை பாா்த்து ரூ.2.10 லட்சத்துடன் மாயமான இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியில் மொத்த ஜவுளி வியாபாரம் நடைபெறும் கடையின் மேலாளராக பணிபுரிந்து வருபவா் விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்த அப்துல் ஹமீது (35).
இந்தக் கடையில் கடந்த 20 நாள்கள் முன்பு சேலத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் தனது ஆதாா் அட்டையை காண்பித்து பணிக்கு சோ்ந்தாராம்.
இவரிடம் கடையின் மேலாளா் கடந்த 11-ஆம் தேதி அவரது பைக்கை கொடுத்து ரூ.2.10 லட்சத்தையும், ரூ.10,000-க்கான காசோலையையும் வங்கியில் செலுத்துமாறு கொடுத்து அனுப்பினாராம்.
ஆனால், மணிகண்டன் பணத்துடன் மாயமாகிவிட்டாராம். பைக் மட்டும் விழுப்புரம் ரயில் நிலையம் முன் நின்றுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனா்.