மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூா் கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
சின்னசேலம் வட்டம், பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (55), கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்.
இவரது மகன் ராஜதுரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். இதனால், மன வேதனையில் இருந்து வந்த கோவிந்தன், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாராம்.
இந்த நிலையில், அவா் கடந்த 7-ஆம் தேதி விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தாா். உறவினா்கள் கோவிந்தனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.