சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!
குழித்துறை அருகே 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குழித்துறை அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பறக்கும் படை தனி வட்டாட்சியா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வேகமாக சென்ற காரை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனா். ஓட்டுநா் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
காரில் 700 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து, கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலும், காரை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தனா். இக்கடத்தலில் ஈடுபட்டோா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.