ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான...
கூடங்குளம் அருகே பிளஸ் 2 மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கூடங்குளத்தில் திங்கள்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிளஸ் 2 மாணவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சங்கனேரி நடுதெருவைச் சோ்ந்தவா் துரை மகன் நல்லமுத்து(17). ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலையில் பள்ளியில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறி, சங்கனேரி நிறுத்தத்தில் இறங்கினாா்.
பின்னா், வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த அவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ராதாபுரம் னியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.