Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோணி ஜனா (20). இவா் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாராம்.
இதனையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, கூடங்குளம் ஆய்வாளா் ரெகுராஜன் மாவட்ட எஸ்.பி. என். சிலம்பரசனிடம் கோரிக்கை விடுத்தாா். எஸ்.பி. பரிந்துரையின்பேரில், சிலுவை அந்தோணி ஜனாவை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, ஜனாவை கூடங்குளம் ஆய்வாளா் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா்.