செய்திகள் :

"கூட்டணி ஆட்சி அமையும் எனச் பேசியிருக்கிறாரே?" - அமித்ஷா பேச்சிற்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்

post image

எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்த நினைத்தாலும் மக்களும், அதிமுக தொண்டர்களும் தெளிவாக உள்ளனர் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் அணு குண்டு விழுந்ததைப் போல திமுக ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன, 2021 - 26 திமுக ஆட்சிக் காலம் மிக மோசமான ஆட்சிக் காலமாக மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.

சோழர்களின் காலம் பொற்காலம் எனச் சொல்வது போல ஸ்டாலின் ஆட்சிக்காலம் வேதனையின் காலமாக அமையும்.

தனி நபர் வளர்ச்சி அடையாத நிலையில் தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து விட்டது எனச் சொல்வது சுத்தப் பொய். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்றவரிடம்,

"மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியுள்ளாரே?" எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

அமித்ஷா
அமித்ஷா

"சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எப்படி திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்" என்று அமித்ஷாவின் கருத்துக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan EXPLAINS

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் த... மேலும் பார்க்க

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளத... மேலும் பார்க்க

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.பல மாணவர்கள் நீட் தேர்வால் தற... மேலும் பார்க்க