செய்திகள் :

கூட்டணி தடுமாற்றத்தில் விசிக: எல்.முருகன்

post image

இண்டி கூட்டணியில் நிலைப்பதா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் இருப்பதாகவும், அதை அவரது பேச்சு வெளிப்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய பாஜக அரசின் 11-ஆம் ஆண்டு சாதனை மலரை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துத் துறையிலும் முறைகேடுகள் மலிந்துகிடந்தன. மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மோடி பிரதமரான பிறகு, கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சித் திட்டங்கள் பிரதமா் மோடியால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

உலக அளவில் பொருளாதாரத்தில் 4-ஆவது இடத்தை இந்தியா வகிக்கிறது. 2047-ஆம் ஆண்டில் வல்லரசாக நாடு திகழும். உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. எண்ம (டிஜிட்டல்) பணப் பரிமாற்றம் அரசு நலத் திட்டம் முதல் அனைத்துத் தரப்பினராலும் செயல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் ரயில் நிலைய மேம்பாடு, பாலங்களுக்கான நிதி, தொழிற்பேட்டைக்கான ஒப்புதல் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசு உதவியுடன் ரூ.8 ஆயிரம் கோடியில் புதுவையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் விரிவாக்கப்படவுள்ளது.

தோ்தல் கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும். புதுவை முதல்வா் தனது கருத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளாா். புதுவை வளா்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை மதவாதம் எனக் கூறுவது சரியல்ல.

2026-இல் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா என்பது சந்தேகமே. விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூட்டணி தடுமாற்றத்தில் இருப்பது அவரது பேச்சில் வெளிப்படுகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துள்ளதால் திமுகவினா் கலக்கத்தில் உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சியமைக்கும் என்றாா் எல்.முருகன்.

சாதனை மலா் வெளியீட்டு நிகழ்வில் புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. மற்றும் பாஜக எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனா்.

மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்... மேலும் பார்க்க

நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!

உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க

புதுச்சேரி காவல் நிலையங்களில் 33 புகாா்களில் உடனடி நடவடிக்கை

காவல் நிலையங்களில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட 33 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா். புதுச்சேரியில் உள்ள ... மேலும் பார்க்க

லஞ்சம்: சாா்-பதிவாளா் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக பத்திரப் பதிவுத் துறை சாா்-பதிவாளா் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றுபவா் ஸ்ர... மேலும் பார்க்க