அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன்குடி, கோவில்பட்டி, கயத்தாா் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இணைப் பதிவாளா் தலைமையில் துணைப்பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்), 27 கூட்டுறவு சாா்பதிவாளா்கள், 8 முதுநிலை ஆய்வாளா்கள் உள்ளிட்ட 35 கூட்டுறவு துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
மொத்தம் 149 கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, இருப்பு குறைவுக்காக ரூ.18,550, கூடுதல் இருப்புக்காக ரூ. 10,825 என மொத்தம் ரூ. 29,375 நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.